சினிமா

மறுபடியும் இவரா! இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறபோவது யார்? கசிந்த ஷாக் தகவல்!!

Summary:

மறுபடியும் இவரா! இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறபோவது யார்? கசிந்த தகவல்!!

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நட்பு, சண்டை, மோதல் வாக்குவாதங்கள் என எதற்கும் பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. இதில் அடுத்தடுத்த வாரங்களில் போட்டியாளர்கள் குறைந்த வாக்குகளைப் பெற்று எலிமினேட்டாகி வருகின்றனர். அவ்வாறு நிகழ்ச்சி தொடங்கிய 21 நாளிலேயே எலிமினேட் செய்யப்பட்டவர் அபிஷேக்.

அவர் நிகழ்ச்சிக்கு விறுவிறுப்பான கன்டெண்ட்டுகளை கொடுத்து வரும் நிலையில் தற்போது மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியில் களமிறங்கியுள்ளார். அவரை தொடர்ந்து அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகியோரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இந்த நிலையில் இந்த வாரம் சிபி, வருண், அபிஷேக், பிரியங்கா, அபினய், பாவ்னி, இமான் அண்ணாச்சி, அக்ஷரா, தாமரை, ராஜு உள்ளிட்ட பலரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என எதிர்பார்ப்பு நிலவி வந்தநிலையில் மீண்டும் அபிஷேக்கே அனைவரை விடவும் மிகவும் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளதாகவும், மேலும் அவரே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறபோவதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. அவரைத் தொடர்ந்து அபினய், வருண், தாமரை ஆகியோர் குறைந்த வாக்குகளை பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. 


Advertisement