கமலுக்கு மீண்டும் ஜோடியாகும் விருமாண்டி பட நடிகை.. வெளியான அசத்தல் தகவல்.!Abirami pair with Kamal in new movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

kamal

இந்த திரைப்படத்தை தொடர்ந்து 35 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க, ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார்.

kamal

இந்தப் படத்தின் பூஜை மற்றும் ப்ரமோஷன் வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா அல்லது திரிஷா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விருமாண்டி படத்தில் நடித்த நடிகை அபிராமி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.