பிக்பாஸ் வீட்டிற்குள் மலர்ந்த காதல்!! ஷாக்காகி நம்ம ஹீரோ என்ன பதிலளித்துள்ளார் தெரியுமா?



abirami-loves-kavin-in-bigboss

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் சர்ச்சைகளுக்கும், காதல் காட்சிகளும்  பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.  அவ்வாறு ஆரவ் ஓவியா, மகத் யாஷிகா காதல் ஜோடிகளை தொடர்ந்து இந்த சீசனிலும் புதிய காதல் கதை ஒன்று ஆரம்பமாகிறது. 

kavin

அதாவது போட்டியாளர் அபிராமிக்கு சரவணன் மீனாட்சி புகழ் கவின் மீது காதல் ஏற்பட்டுள்ளது. மேலும் போட்டி துவங்கிய இரண்டாவது நாளிலேயே அபிராமி கவின் மீது தனக்கு ஏற்பட்டுள்ள க்ரஷ் மற்றும் காதலை குறித்து ஷெரின் மற்றும் ஸாக்ஷியுடன் பகிர்ந்து கொண்டார்.

அதனை தொடந்து அவரே கவினிடம் தனது காதலை  நேரடியாக தெரிவித்துள்ளார. இந்நிலையில் அவரது காதலை ஏற்றுக்கொள்ளாதது போல், மிகவும் பொறுமையாக அவருக்கு பதிலளித்துள்ளார்.

kavin

அதாவது கவின் அபிராமியிடம் என்னிடம் இன்னும் 15 நாள் பழகினால் என்னை உனக்கு பிடிக்காமலும் போகலாம்.  நான் ஆசை வார்த்தை கூறி உன்னை நோகடிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார். அதற்கு அபிராமி சரி நாம் நண்பர்களாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். இருப்பினும்  அபிராமி கவின் குறித்து சக போட்டியாளர்கள் மத்தியில் புலம்பி வருகிறார்.