ஐஸ்வர்யா ராயுடன் பிக்பாஸ் ஆரி! அதுவும் எப்போ சந்தித்துள்ளனர் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்!!aari-with-aishwarya-rai-photo-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜனவரி 17 முடிவுக்கு வந்தது. அதில் மக்களின் பேராதரவை பெற்று நடிகர் ஆரி வெற்றியாளர் ஆனார். அவர் 2010 ஆம் ஆண்டு வெளியான ரெட்டைசுழி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஆரி நெடுஞ்சாலை, உன்னோடு கா, நாகேஷ் திரையரங்கம் என பல படங்களில் நடித்துள்ளார். 

நடிகர் ஆரி நடிப்பு மட்டுமின்றி ஜல்லிக்கட்டு பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, வெள்ளம் என அனைத்து பிரச்சினைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளார். மேலும் மாறுவோம் மாற்றுவோம் என்ற அமைப்பின் மூலம் இளைஞர்களுக்கு விவசாயம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். 

aari

இந்தநிலையில் ஆரி, ஐஸ்வர்யா ராய் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதாவது 24 வயதில் ஆரி ஹீரோவாக நடித்த ரெட்டைச்சுழி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது இருவரும் ஒன்றாக பேசிக் கொண்டிருந்தபோது எடுத்த புகைப்படத்தை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்