சினிமா

ஆதரவாக நின்ற சக போட்டியாளருக்கு செம மாஸ் பட்டம் கொடுத்த ஆரி! அது யாருன்னு பார்த்தீர்களா!!

Summary:

தனக்கு ஆதரவாக நின்ற சனம் ஷெட்டியை உண்மையான போர்வீரர் என ஆரி பாராட்டியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் மூன்று சீசன்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றநிலையில் நான்காவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நாளுக்கு நாள் சுவாரசியங்களுடன் சென்ற நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வந்தது.

இந்த சீசனில் சோம், ரம்யா, ரியோ, பாலா, ஆரி ஆகியோர் இறுதி நாட்கள் வரை வந்த நிலையில் நடிகர் ஆரி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் பாலா இரண்டாவது இடத்தையும், ரியோ மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.  ஆரியின் வெற்றியை சக போட்டியாளரான சனம் மற்றும் அனிதா இருவரும் வரவேற்று கொண்டாடினர். 

மேலும் சனம் ஷெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில், ஆரி ப்ரோ உங்களால் நாங்கள் உச்சக்கட்ட பெருமை படுகிறோம். உங்களுடன்  போட்டியிட்டது எங்களுக்கு மரியாதை. எப்பொழுதும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். மில்லியன் இதயங்களை கைப்பற்றிவிட்டீர்கள் என பதிவிட்டுள்ளார். இதற்கு ஆரி என்னுடன் எப்போதும் துணை நின்றதற்கு நன்றி. நீங்கள் உண்மையான போர்வீரர் என சனமை பாராட்டி பதில் அளித்துள்ளார்.


Advertisement