
ஹீரோ டூ வில்லன்! நடிகை ஹன்சிகாவிற்கு வில்லனாகும் பிக்பாஸ் பிரபலம்.! யார்னு பார்த்தீங்களா.!
தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. அதனைத் தொடர்ந்து அவர் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தென்னிந்திய சினிமாவிலேயே டாப் ஹீரோயினாக வலம்வந்தார். மேலும், கொழுகொழுவென இருந்த அவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது.
ஹன்சிகா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் எக்கச்சக்கமான படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தற்போது உடல் எடை குறைந்து செம ஸ்லிம்மாக மாறியுள்ளார். நடிகை ஹன்சிகா மகா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
தற்போது அவர் இகோர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹன்சிகாவிற்கு வில்லனாக பிக்பாஸ் ஆரி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரி இதற்கு முன்பு ரெட்டை சுழி, நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றியாளர் ஆகியுள்ளார்.
Advertisement
Advertisement