#Breaking: ஆஸ்கரில் மிகப்பெரிய அதிர்ச்சி.. இந்திய படங்கள் தேர்வு இல்லை.. ஷாக் தகவல்.!
என்ன ஒரு உற்சாகம்! வைரலாகும் குட்டி தலயின் கியூட் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும் பிரபலமான நடிகர், நடிகைகள் பலரும் அஜித்தின் பரம ரசிகர்களாக உள்ளனர். மேலும் இவரோடு இணைந்து நடிப்பதை மாபெரும் கனவாகவும் வைத்துள்ளனர்.
இவருக்கும் நடிகை ஷாலினிக்கும் காதல் மலர்ந்து கடந்த 2000ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு அனோஷ்கா என்ற பெண் குழந்தையும் அதன்பிறகு 2015ஆம் ஆண்டு ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது.
இந்நிலையில் தற்போது அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் விறுவிறுப்பாக நடித்து கொண்டிருக்கிறார். மேலும் சமீபத்தில் அவரது மகன் ஆத்விக்கிற்கு மிகவும் பிரமாண்டமாக பிறந்தநாள் கொண்டாடப்பட்டு புகைப்படமும் வெளிவந்தது.
இந்நிலையில் தற்போது அஜித்தின் மனைவி மற்றும் அவரது மகன் ஆத்விக் வெளியே சென்றுள்ளநிலையில் அவரது புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.