சினிமா

சன் டிவியிலிருந்து விஜய் டிவிக்கு தாவிய பிரபல முன்னணி தொகுப்பாளர்! அதுவும் எந்த நிகழ்ச்சியில் தெரியுமா?

Summary:

aadavan join in vijay tv for kpy show

பிரபல தனியார் தொலைக்காட்சியில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் பிரபலமானவர் ஆதவன். அதனை தொடர்ந்து அவர் ஆதித்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கொஞ்சம் நடிங்க பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மேலும் பிரபலமானார். 

பின்னர் அவர் சன் தொலைக்காட்சியில் பல்வேறு ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவர் பல பிரபலங்களின் குரல்களை  அப்படியே மிமிக்ரி செய்து பலகுரல் மன்னராகவும் வலம்வந்தார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.  மேலும் அவர் பல விருதுவிழாக்களையும்  மிக சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

தொகுப்பாளர் ஆதவன்க்கான பட முடிவுகள்

இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் முக்கிய தொகுப்பாளராக விளங்கிவந்த ஆதவன் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி  பெருமளவில் பிரபலமான ரியாலிட்டி ஷோவான  கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொள்ள உள்ளார். 

மேலும் அவருடன் ஈரோடு மகேஷ் , மதுரைமுத்து, வனிதா, ரம்யா பாண்டியன் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement