சினிமா

பிரபல நடிகைக்கு நடந்த திடீர் நிச்சயதார்த்தம்! எப்படி நடந்தது தெரியுமா? வெளியான திடுக்கிடும் தகவல்!

Summary:

A sudden engagement to the famous actress! How did you know The start-up information released!

காயத்ரி கிருஷ்ணா அவர்கள் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். மேலும் பிரபல நடிகைகளில் இவரும் ஒருவர் ஆவார். இவர் அவரது நடிப்பால் ஒரு மிகப்பெரிய இடத்தையும் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையும் கொண்டவர். 

இவர் மலையாளத்தில் சில படங்களை நடித்துள்ளார். பின்பு தமிழில், ஜோக்கர், மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை என்னும் இரு படங்களில் நடித்துள்ளார். அதற்கு பின்பு தற்போது இயக்குனர் சமுத்திரக்கனி உடன் இணைந்து சங்கத்தலைவன் என்னும் படத்தில் நடிக்கிறார். 

சமீபத்தில் நடிகை காயத்திரியின் நடிப்பில் உருவாக்கி வெளிவந்த மேற்கு தொடர்ச்சிமலை என்னும் படத்தின் மூலம் நடிகை காயத்திரியின் நடிப்பு பரவலாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது.

இதனை அடுத்து சங்கத்தலைவன் என்னும் படத்தில் இயக்குனர் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் நடிகை காயத்ரி திருமணம் செய்து கொள்ள போவதாக இருக்கிறார். 

நடிகை காயத்திரியை ஜீவன் ராஜன் என்பவர் திருமணம் செய்து கொள்ள போகிறாராம். ஜீவன் ராஜன் என்பவர் காயத்ரியின் குடும்ப நண்பர் ஆவார். மேலும் இவர் கன்னட சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருக்கிறார்.

ஜீவன் ராஜன் எனபவரும் நடிகை காயத்ரியும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்தார்கள் என்று தகவல் வெளியானது. இந்த தகவலை அறிந்ததும் தற்போது இருவீட்டார் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையான முறையில் நடத்தியுள்ளனர். இன்னும் இவர்களது திருமண தேதி முடிவாகாமல் இருப்பதாகவும் தகவல் வெளியானது. 

மேலும் இவர்கள் இருவருக்கும் இந்த ஆண்டின் இறுதிக்குள் திருமணம் நடக்கும் என்று இவர்களின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.


Advertisement