ஏ.ஆர்.ரகுமான் முக்கியமான நாளில் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா...! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ...



A. R. Rahman wedding day special

தமிழ் சினிமாவில் ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர் ரஹ்மான். அதனைத் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்த நிலையில் அவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிளிலும், ஏராளமான டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் ஏ.ஆர் ரஹ்மான் தனது பாடலால் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு, வெற்றியின் உச்சம் தொட்டு தற்போது இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார்..மேலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் ஏ.ஆர் ரஹ்மான் ஏராளமான தேசிய விருதுகளையும், ஆஸ்கர் விருதினையும் பெற்றுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் மார்ச் 12, 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானுவை திருமணம் செய்து  கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஏ.ஆர்.ஆர்.அமீன் என்ற மகனும், கதீஜா, ரெஹிமா என இரு மகள்களும் உள்ளனர். மேலும் சமூக  வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக  இருக்கும் இவர் இன்று தனது 27வது திருமண நாளை மனைவியுடன் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளர். இந்த சிறப்பான தருணத்தில், தனது மனைவியுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தினை  தனது  இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டு,  ‘ஒன்றாக இருப்பது கலை’ என்று பதிவிட்டுள்ளார். இதோ அந்த அழகிய  புகைப்படம்...