96 , பரியேறும் பெருமாள், சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படங்களாக தேர்வு.!

96 , பரியேறும் பெருமாள், சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படங்களாக தேர்வு.!


96, pariyarumperummal cinima indernational award

96 , பரியேறும் பெருமாள் ஆகிய திரைப்படங்கள் சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 13 ம் தேதி தொடங்கப்பட்ட சர்வதேச திரைப்பட விழா சென்னையில் நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான நேற்று தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு வெற்றிபெற்ற படங்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

விழாவில் சிறந்த தமிழ்ப் படங்கள் வரிசையில் “96”, “அபியும் நானும்”, “அண்ணனுக்கு ஜே”, ஜீன்ஸ், இரவுக்கு ஆயிரம் கண்கள், இரும்புத்திரை, கடைக்குட்டி சிங்கம், மெர்குரி, பரியேறும் பொருமான், ராட்சசன், வடசென்னை, வேலைக்காலன் ஆகிய 12 படங்கள் திரையிடப்பட்டன. மேலும் சிறப்பு திரைப்படமாக “மேற்கு தொடா்ச்சி மலை” திரையிடப்பட்டது. 

மேலும் 50 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 150 திரைப்படங்கள் விழாவில் கலந்து கொண்டது. இதில் சிறந்த படங்களாக 96 , பரியேறும் பெருமாள் ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

மேலும் வடசென்னை படத்தின் இயக்கத்துக்காகவும், அண்ணனுக்கு ஜே படத்தின் தயாரிப்புக்காகவும் இயக்குநா் வெற்றிமாரனுக்கு நடுவா் குழுவின் சிறப்புப் பரிசு  வழங்கப்பட்டது.