13 வருட காதல்.! நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கு திருமணம்.! மாப்பிள்ளை யார் பார்த்தீங்களா!!
'96' பட ஜுனியர்கள் உண்மையாவே லவ் பண்றாங்களா..? நாயகி போட்டுடைத்த இரகசியம்..!

நடிகர் விஜய் சேதுபதியுடன் திரிஷா இணைந்து நடித்த திரைப்படம் 96. இந்த திரைப்படம் கடந்த 4 ம் தேதி வெளியானது.ராமசந்திரன் , ஜானு இருவரும் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் பத்தாவது படிக்கிறார்கள்.இருவருக்குமே உள்ளுக்குள் காதல். ஜானகி தனக்குள் இருக்கும் காதலை அவ்வப்போது வெளிக்காட்டி கொண்டாலும், ராமச்சந்திரனுக்கு அதை வெளிக்காட்ட பயம்.
எதிர்பாராத காரணங்களால் பள்ளிப்பருவத்திலேயே இருவரும் பிரிந்து விடுகின்றனர். மீண்டும் 22 வருடங்களுக்குப்பின் ஸ்கூல் ரீ-யூனியன் சந்திப்பில் இருவரும் சந்திக்கின்றனர்.மீண்டும் சந்தித்துக் கொண்ட இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? என்ன காரணங்களால் இருவரும் பிரிந்தனர்? என்பதே '96' படத்தின் கதை.
96 படத்தில் விஜய் சேதுபதி, திரிஷாவின் பள்ளி பருவ கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர்கள் ஆதித்யா பாஸ்கரும், கௌரியும். யதார்த்தமான நடிப்பால் சீனியர்களையே தூக்கி சாப்பிட்டார்கள் இந்த ஜூனியர்கள்.96 படத்தில் நடித்த ஆதித்யாவும், கௌரியும் நிஜத்தில் காதலிப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.
இவர்களின் இயல்பான நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. படத்தில் பள்ளி முடிக்கும் முன்னே இந்த காதல் ஜோடி பிரிந்துவிடும்.ஆனால் நிஜத்தில் இவர்கள் இணைவார்களா என்ற கேள்வி கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக உலா வருகிறது.
இதற்கு காரணம் ஆதித்யாவின் இன்ஸ்ட்டாகிராம் பதிவு. கௌரியுடன் போஸ் கொடுத்து நிற்கும் ஆதித்யா, லவ் மூட் எமோஜிகளுடன் இந்த போட்டோவை பதிவிட்டார். அவ்வளவு தான். இதை பார்த்த எல்லோரும், இருவரும் காதலிப்பதாக நினைத்து செய்தியை பரப்பிவிட்டனர்.
சிறிது நேரத்தில் அந்த போட்டோவை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் இருந்து எடுத்துவிட்டார் ஆதித்யா. ஆனால் மற்றொரு வீடியோவில், "அவ முகத்த பாருங்க... மேரி ஜானு (என்னுடைய ஜானு)இளவரசி தானா? ஆமாம்," என பதிவிட்டுள்ளார்.
இதையெல்லாம் வைத்து கௌரியை, ஆதித்யா காதலிக்கிறார் என உறுதியே செய்துவிட்டார்கள் நெட்டிசன்கள். ஆனால் இந்த காதல் செய்தியை மறுத்திருக்கிறார் கௌரி.
அவருடையே பதிவில்," நானும் ஆதித்யாவும் காதலிக்கவில்லை. நாங்கள் காதலிப்பதாக உலவும் செய்தியை நம்ப வேண்டாம். பரப்பவும் வேண்டாம். படத்தில் நாங்கள் காதலிப்பது போல் நடித்தோம். நிஜத்தில் அப்படி எதுவும் இல்லை", என விளக்கமளித்துள்ளார்.
ஆனால் ஆதித்யா தரப்பில் இருந்து எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இதனால் இது ஒருதலை காதலாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுகிறது. அதேநேரத்தில் படத்துக்கான புரொமோஷனாகக் கூட இது இருக்கலாம் எனவும் தோன்றுகிறது. ஒருவேளை இருவரும் காதலிப்பதாக இருந்தால்,நிஜத்திலாவது இணையுங்கள் என வாழ்த்துகிறார்கள் நெட்டிசன்கள்.