புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
ஆசையை நிறைவேற்றிய தருணம்.. 73 வயதில் 10-ஆம் வகுப்பு தேர்வெழுதிய பிரபல நடிகை..! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!!
மோலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் லீனா ஆண்டனி. இவர் தனது 13 வயதிலிருந்தே நூற்றுக்கணக்கான மலையாள நெடுந்தொடர்களில் நடித்திருக்கிறார். மகேஷிண்டே பிரதிகாரம், ஜோ அண்ட் ஜோ, 'மகள்'
உள்ளிட்ட பல மலையாள படங்களிலும் நடித்தார்.
ஆனால் தான் சிறுவயதில் 10-ஆம் வகுப்பு படித்தபோது தேர்வெழுதி அதில் தோல்வியடைந்தார். அதன் பின் நடிகையானதால் தொடர்ந்து அவரால் படிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். இவரது கணவர் ஆண்டனியும் திரைப்படங்களில், நாடகங்களில் நடித்து சில வருடங்களுக்கு முன்னதாக இறந்துபோனார். தற்போது லீனா ஆண்டனிக்கு வயது 73 ஆகிறது.
எப்படியாவது 10-ஆம் வகுப்பு தேர்வை மீண்டும் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்ட லீனா, தீவிரமாக படித்து தற்போது பத்தாம் வகுப்பு தேர்வினை எழுதியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, "நான் சினிமா வசனங்களை மனப்பாடம் செய்து பேசுவேன். அது பத்தாவது வகுப்பு பாடங்களையும் மனப்பாடம் செய்து தேர்வுவெழுத எனக்கு உதவியாக இருந்தது" என்று கூறியுள்ளார். இதனைக்கேட்ட ரசிகர்கள் ஆச்சர்யத்தில் பூரிப்படைந்துள்ளனர்.