பிரபல பாடகி அனுராதாதான் எனது தாய்! பல ரகசியங்களை போட்டுடைத்த 45 வயது பெண்! அதிர்ச்சியில் திரையுலகம்!
பிரபல பாடகி அனுராதாதான் எனது தாய்! பல ரகசியங்களை போட்டுடைத்த 45 வயது பெண்! அதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபல பின்னணிப் பாடகி அனுராதா பட்வால். இவர் பத்மஸ்ரீ மற்றும் தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார். அனுராதாவின் கணவர் இசையமைப்பாளர் அருண் பட்வால். இந்நிலையில் சமீபத்தில் கேரளா திருவனந்தபுரத்தில் வசித்து வரும் 45 வயது நிறைந்த கர்மலா மோடெக்ஸ் என்ற பெண் அனுராதா பட்வால்தான் எனது தாய் என மாவட்ட குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் கூறுகையில் நான் பிறந்த நான்கு நாட்களிலேயே எனது தாய் அனுராதா, பொன்னச்சன் என்பவரிடம் என்னை தத்து கொடுத்துவிட்டார். இது எனது வளர்ப்புத் தாயான அக்னீஸ்க்கு கூட தெரியாது.அதனைத் தொடர்ந்து பொன்னாச்சன் மற்றும் அவரது மனைவி இருவரும் என்னை வளர்த்து வந்தனர்.
மேலும் நான் பிறந்த போது எனது தாய் பெரிய பாடகியாக மிகவும் பிஸியாக இருந்தார். அப்பொழுது அவரது தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் போய் விடுமோ என்பதால், என்னை வளர்க்க முடியாமல் பொன்னச்சனிடம் கொடுத்துள்ளார். இந்த உண்மையை எனது தந்தை சமீபத்தில் இறப்பதற்கு முன்புதான் என்னிடம் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து நான் பலமுறை எனது தாய் அனுராதாவிடம் பேச முயற்சி செய்துள்ளேன் ஆனால் அவர் மறுத்துள்ளார் என கூறியுள்ளார். மேலும் தனது வாழ்வாதாரத்திற்கு அவர் ரூபாய் 50 கோடி நஷ்ட ஈடு எனக்கு கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.