சன் டிவி ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தி! பிரபலமான இந்த 4 சீரியல்கள் அதிரடி நிறுத்தம்!

சன் டிவி ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தி! பிரபலமான இந்த 4 சீரியல்கள் அதிரடி நிறுத்தம்!


4-serials-stopped-in-suntv

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி நாளுக்கு நாள் பாதிப்புகள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து, நாட்டு மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. மேலும் கொரனோ ஊரடங்கால் அனைத்து  படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டது. இதனால் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

Serials

அதனைத்தொடர்ந்து அரசின் சில ஊரடங்கு தளர்வுகளுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகள் துவங்கியது. ஆனால் சீரியலின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைவரும் வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களால் படப்பிடிப்பிற்கு  வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் பல சீரியல்களில் கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டு படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.

ஆனால் அவ்வாறு செய்ய முடியாத நிலையில், இடையூறுகள் அதிகரித்ததால் பிரபல தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தமிழ்ச்செல்வி,  அழகு, சாக்லேட் மற்றும் கல்யாண பரிசு உள்ளிட்ட நான்கு தொடர்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் அத்தகைய தயாரிப்பு குழுவினர் புதிய சீரியல்களை தயாரிக்க திட்டமிட்டிருப்பதாகவும்,  இது குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.