#Breaking: மோசடி வழக்கு; நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!
தங்கம் விலை இன்று உயர்வு.. இன்று தங்கம், வெள்ளி விலை உள்ளே.!

உலகளவில் நடைபெறும் போர்கள், பொருளாதார பிரச்சனை உட்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை என்பது கடுமையான உச்சத்தை சந்தித்து இருக்கிறது. இந்தியாவில் முன்னதாக தங்கத்தின் மீதான இறக்குமதி சுங்கவரி 15% என்ற அளவில் இருந்தது.
ரூ.65 ஆயிரத்தை நெருங்குகிறது
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் சவரன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்து இருந்தாலும், அதனை வாங்கும் மக்களின் எண்ணிக்கையில் எந்த விதமான மாற்றமும் இல்லை. இதனால் விலை உச்சத்திலேயே இருந்து வருகிறது.
இன்று தங்கம் விலை
இந்நிலையில், இன்று சவரன் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.7980 க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் விலை ரூ.320 உயர்ந்து, இன்று ரூ.63480 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.107000 க்கு விற்கப்படுகிறது.