தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கம் விலை... இன்று மீண்டும் உயர்வு...!

தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கம் விலை... இன்று மீண்டும் உயர்வு...!



the-price-of-gold-which-is-constantly-fluctuating-rose

தங்கம் விலை இரண்டு நாட்களாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் தங்கம் விலை இன்று அதிகமாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது. இந்நிலையில் இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில்  மீண்டும் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது.

தங்கம் நேற்று ஒரு கிராமிற்கு ரூ. 55 குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் அதன் விலை அதிகரித்துள்ளது.
24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 20 உயர்ந்து இன்று 5,702 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 160 ரூபாய் அதிகரித்து 45,616 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.20 உயர்ந்து 5,340 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 160 ரூபாய் வரை உயர்ந்து 42,720 ரூபாய்க்கும் விற்பனை செய்யபடுகிறது. 

வெள்ளி, கிராமுக்கு 20 பைசா உயர்ந்து 72.70 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 72,700 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.