இந்திய ரூபாய் மதிப்பு; அமெரிக்க டாலருக்கு நிகராக உயர்வு..!
இந்திய ரூபாய் மதிப்பு; அமெரிக்க டாலருக்கு நிகராக உயர்வு..!

இந்திய ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக 57 பைசா உயர்ந்து ரூ.81.78 ஆக உள்ளது.
அந்நிய செலாவணி வர்த்தகத்தில், ஆசிய நாணயங்களில் ரூபாய் சிறந்த செயல்திறன் கொண்டதாக உள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் 82.35 ஆக இருந்தது. கடந்த நவம்பர் மாதத்திற்குப் பிறகு மிகப்பெரிய ஒருநாள் உயர்வாக இது பார்க்கப்படுகிறது.
இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 22.70 புள்ளிகள் சரிந்து 17,891.45-ஆக உள்ளது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 58.12 புள்ளிகள் சரிந்து 60,057.36-ஆக உள்ளது.