இத யாரும் எதிர்பார்க்கல! தொடர்ந்து குறையும் தங்கம் விலை... இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.2040 குறைவு..!!!



gold-rate-falls-by-2040-rupees

தங்கம் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்று மேலும் அதிரடி சரிவு ஏற்பட்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.2,040 குறைந்து ரூ.97,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தங்கம் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள் இன்றைய விலை நிலவரத்தை கவனித்து வருகின்றனர்.

சவரனுக்கு ரூ.2,040 குறைந்த ஆபரணத் தங்கம்

இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.12,215 ஆக உள்ளது. ஒரு சவரன் ரூ.97,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக விலை சரிந்து வந்த நிலையில், இன்று ஏற்பட்டுள்ள இந்தக் குறைவு நகை வாங்குவோர் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: பல்டி அடிக்கும் தங்கம் விலை! ஒரு சவரன் ரூ.1 லட்சத்திற்கு கீழ் குறைந்தது.... இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ..!!!

24 கேரட் தங்கத்தின் விலை

24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் ரூ.13,604க்கும், ஒரு சவரன் ரூ.1,08,832க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மாற்றமில்லாத வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.190க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

இதையும் படிங்க: பல்டி அடிக்கும் தங்கம் விலை! ஒரு சவரன் ரூ.1 லட்சத்திற்கு கீழ் குறைந்தது.... இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ..!!!