ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
பல்டி மேல் பல்டி அடிக்கும் தங்கத்தின் விலை! சற்று நிம்மதியில் நகை பிரியர்கள்! அதிர்ச்சி கொடுத்த வெள்ளியின் விலை!
சமீபக் காலமாக ஆபரணத் தங்கத்தின் விலை அடிக்கடி உயர்ந்து வந்த நிலையில், இன்று அதில் சிறிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய தினம் 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9,155 என்றும், ஒரு சவரன் ரூ.73,240 என்றும் இருந்தது. ஆனால் இன்று, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.73,160 ஆகவும், கிராமுக்கு ரூ.10 குறைந்து, ரூ.9,145 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தங்கம் ரூ.70,000க்கு மேல் நிலைத்திருந்த நிலையில், இன்று ஏற்பட்ட இந்த விலை குறைவு, தங்கம் வாங்க விரும்பும் மக்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அதிர்ச்சியில் நகை பிரியர்கள்! 73 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை! தங்கத்துக்கு டஃப் கொடுக்கும் வெள்ளி விலை! இன்றைய விலை நிலவரம் இதோ...
மாற்றாக, வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.127.00 என்றும், ஒரு கிலோ ரூ.1,27,000 என்றும் விற்பனை செய்யப்படுகின்றது.