சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
குஷியோ குஷி! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 குறைந்த தங்கம் விலை! வெள்ளி விலையும் தாறுமாறுக குறைவு..!
உலக அரசியல் பதற்றம் மற்றும் பொருளாதார மாற்றங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று சென்னையில் திடீரென விலை சரிவை சந்தித்து நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரஷ்யா-உக்ரைன் மோதல், மத்திய கிழக்கு விவகாரம் மற்றும் அமெரிக்காவின் அரசியல் நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக மாற்றியதால் விலை மிக வேகமாக உயர்ந்தது. இதனால் தங்கம் சாதாரண மக்களுக்கு எட்டாத நிலையைக் கடந்தது.
இதையும் படிங்க: நகை வாங்கணுமா! கடைக்கு ஓடுங்க...இன்று கொஞ்சம் குறைந்தது! நாளை என்னவோ! இன்றைய தங்கம் விலை நிலவரம்!
திடீர் சரிவு
கடந்த சில வாரங்களில் தங்கம் ரூ.86,000 முதல் ரூ.97,000 வரை உயர்ந்திருந்த நிலையில், கடந்த வாரம் ரூ.4,000 வரை விலை குறைந்தது. அதனை தொடர்ந்து இன்று சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.150 குறைந்து ரூ.11,300க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.1,200 குறைந்து தற்போது ரூ.90,400 என்ற விலையில் விற்பனையாகும் நிலை உருவாகியுள்ளது.
வெள்ளி விலையும் பாதிப்பு
தங்கத்துடன் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.165க்கு விற்பனை. ஒரு கிலோக்கு சுமார் ரூ.5,000 குறைந்து ரூ.1,65,000 என்ற விலையில் சந்தைக்கு வந்துள்ளது.
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்க விலை இவ்வாறு குறைந்ததால் மக்கள் நிம்மதி அடைந்திருப்பது வியாபார வளாகங்களில் பிரதிபலித்துள்ளது. வருங்காலத் தங்க விலை நிலவரம் மீதான கவலைகள் இருந்தாலும் இந்த சரிவு நிச்சயமாக சலுகையாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை! இன்றைய தங்கம் விலை நிலவரம்.....