உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நகைபிரியர்கள்! அதிரடியாக குறைந்த தங்கம் விலை! ஒரே நாளில் சவரனுக்கு எவ்வளவு குறைந்துள்ளது தெரியுமா? இன்றைய தங்கம் விலை நிலவரம்...



gold-price-drop-chennai-july-24

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்வு கண்டிருந்த நிலையில், இன்று அதில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.1000 குறைந்து, ஒரு சவரன் ரூ.74,040, மற்றும் ஒரு கிராம் ரூ.9,255 என விலை குறைந்துள்ளது.

அதேபோன்று, 24 கேரட் தூய தங்கம் விலை கிராமுக்கு ரூ.10,096, ஒரு சவரனுக்கு ரூ.80,768 எனக் குறைவடைந்துள்ளது. மேலும், வெள்ளி விலை கூட ஒரு ரூபாய் குறைந்து, கிராமுக்கு ரூ.128, கிலோவுக்கு ரூ.1,28,000 என விற்பனை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு, தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்ட இக்குறைவு, நகை பிரியர்களிடயே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: அதிர்ச்சியில் நகை பிரியர்கள்! 73 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை! தங்கத்துக்கு டஃப் கொடுக்கும் வெள்ளி விலை! இன்றைய விலை நிலவரம் இதோ...