தீபாவளி வரை காத்திருக்க வேண்டாம்.. நகை பிரியர்களே.. இப்போதே முந்துங்கள்.!



Gold Drops to ₹13300 Experts Advise Buying Now Instead of Waiting for Diwali

தங்கத்தின் விலை சவரனுக்கு சுமார் ₹13,300 ஆக குறைந்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு ₹15,000-ஐ தாண்டிய நிலையில், இனி தங்க விலை குறைய வாய்ப்பில்லை என பல சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

ஆனால், ஈரான் தொடர்பான போர் பதற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் காரணமாக தங்கத்தின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த உச்ச விலையிலிருந்து சுமார் 5% வரை விலை குறைந்திருப்பது வாங்குபவர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

gold rate

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்க நகை வாங்க பல குடும்பங்கள் காத்திருந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள விலை சரிவு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. சர்வதேச சூழ்நிலைகள் எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடும் என்பதால், தங்க விலை மீண்டும் உயரக்கூடிய சாத்தியமும் இருப்பதாக சந்தை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதையும் படிங்க: BREAKING: மக்களுக்கு மகிழ்ச்சி அளித்த தங்கம் விலை! ஒரே நாளில் சவரனுக்கு அதிரடி சரிவு!!!

இதனால், நகை வாங்கும் திட்டம் உள்ளவர்கள் தீபாவளி வரை காத்திருக்காமல், தற்போதைய விலையிலேயே வாங்குவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் என்று வல்லுநர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: மகிழ்ச்சி செய்தி....திடீரென குறைந்த தங்கம் விலை! சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா? செம குஷியில் நகைப்பிரியர்கள்...!!