இன்று சற்று உயர்வு! இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ...!!!
சென்னையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்வு கண்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது. இதனால் நகை வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கவனத்துடன் சந்தை நிலவரத்தை கண்காணித்து வருகின்றனர்.
22 கேரட் ஆபரண தங்கம் விலை உயர்வு
இன்றைய நிலவரப்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் 22 கேரட் ஆபரண தங்கம் ரூ.1,12,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.14,060 என்ற விலையை எட்டியுள்ளது.
24 கேரட் தூய தங்கத்திலும் ஏற்றம்
ஆபரண தங்கத்தைப் போலவே 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தூய தங்கம் ரூ.15,305-க்கும், ஒரு சவரன் ரூ.1,22,440-க்கும் விற்பனை செய்யப்படுவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: மீண்டும் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை! இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ...!!!
வெள்ளி விலையில் மாற்றமில்லை
இதற்கிடையில், வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,75,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் முதலீட்டு தேவைகளின் அடிப்படையில் வரும் நாட்களிலும் தங்கம், வெள்ளி விலைகளில் மாற்றம் ஏற்படக்கூடும் என வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: BREAKING : குஷியோ குஷி....தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1040 சரிவு..!!!