பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கு தடையா! உச்சக்கட்ட பரபரப்பில் ரசிகர்கள்!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கு தடையா! உச்சக்கட்ட பரபரப்பில் ரசிகர்கள்!


bigboss 3

தமிழ் நாட்டின் மிக பிரபலமான பொழுதுபோக்கு தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சி.இதுவரை எப்பொழுதும் புதிதான நிகழ்ச்சிகளை வழங்கி வரும் விஜய் டிவி, பொழுது போக்கின் உச்சகட்டமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் தொடங்கி வைத்தது.

இந்த ஒரு நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏனென்றால் ஒவ்வொரு சீசனுக்கும் புதிய பரிமாணங்கள் உண்டு. புதிய முகங்கள், புதிய குணங்கள் என்று ஏகப்பட்ட புதுமைகள் இதில் உண்டு.தற்போது பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஒளிபரப்புவதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

bigboss3

பிரபலங்களை வீட்டுக்குள் அடைத்து வைத்து 100 நாட்கள் 60 கேமராக்கள் அவர்களது நடத்தையை ரசிகர்கள் காணும் வகையில் நடக்கும் ரியாலிட்டி ஷோ உலகம் முழுவதும் பிரபலமானது.

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்து வரும் பிக்பாஸ் சீசன் 3 வரும் ஜூன் 23ம் தேதி முதல் தொடங்க உள்ளது. முதல் இரண்டு சீசனை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
 
மேலும் அம்மனுவில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எவ்வித கட்டுபாடும் இல்லாமல் ஆபாச உடைகள், இரட்டை அர்த்த வசனங்கள் ஆகியவை சிறுவர்களின் மனதை கெடுக்கும் வகையில் உள்ளதால் இந்த நிகழ்ச்சியை இந்தியன் பிராட்காஸ்ட் ஃபவுண்டேசனின் (IBF) தணிக்கை சான்று பெறாமல் ஒளிபரப்பக் கூடாது என்றும், இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் என நீதி மன்றத்தில் பொதுநல மனு தாக்கல் ஓன்றை செய்துள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.