தொடரும் வரதட்சணை கொடுமை, வீடியோகாலில் கணவன் கண்முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.!

தொடரும் வரதட்சணை கொடுமை, வீடியோகாலில் கணவன் கண்முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.!


wife attempt suicide for dowry problem

ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், வித்யுத்நகர் பகுதியில் வசித்தவர் அருணாதேவி இவருக்கும்,யானம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் வெங்கடேஷ் என்பவருக்கும், கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது.

பெருமாள் வெங்கடேஷ் லண்டனில் வேலை பார்ப்பதால், 1 கிலோ வெள்ளி, 25 சவரன் நகைகள், 2 லட்சம் ரொக்கம் என பெண் வீட்டார் வரதட்சணையாக கொடுத்தனர்.

இந்நிலையில் திருமணமான ஒரு மாதத்திலேயே, பெருமாள்  தன் தந்தை காமேஸ்வரராவ், தாய் அம்மாஜி ஆகியோரை மட்டும், தன்னுடன் அழைத்துக் கொண்டு, லண்டனுக்கு சென்று விட்டார். மனைவியை, அவரது அம்மா வீட்டில் விட்டுச் சென்று விட்டார்.

இதனால் மனமுடைந்த அருணாதேவி . தினமும், தன் கணவருக்கு போன் பண்ணி, “என்னை எப்போ லண்டனுக்கு கூட்டிட்டு போவீங்க? என்று கேட்டுள்ளார். 

அனால்  அவரது கணவர் பெருமாள் வெங்கடேஷ், “உன்னை லண்டனுக்கு அழைத்து செல்ல வேண்டுமென்றால்  10 லட்ச ரூபாய் ரொக்கம், 20 சென்ட் நிலமும்  வரதட்சணையாக  கேட்டுள்ளார்.

இதனால் வருத்தத்தில் இருந்த அருணா இறுதியாக தன் கணவரிடம் வீடியோ காலில் அரை மணி நேரம் பேசினார். “என்னை கூட்டிக் கொண்டு போகா விட்டால், உங்கள் கண் முன்னே, துாக்கு போட்டு செத்து விடுவேன்” என்று கூறியுள்ளார் .

   dowry

ஆனால், கணவரோ, வரதட்சணையைப் பற்றியே பேசிக் கொண்டிருந்திருக்கிறார். இதனால் வெறுத்துப் போன அந்தப் பெண், வீடியோவில் தன் கணவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அறைக்குள் சென்று துாக்கு மாட்டி, துடி துடித்து இறந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் பெருமாள், தகவலை, பெண் வீட்டாருக்கு கூறியுள்ளார். 

பின்னர் பெண் வீட்டார் அளித்த புகாரின் பேரில் போலீசார், பெருமாள் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, வழக்குப் பதிவு செய்துள்ளனர்.