ஓமலூரில் கணவர் என்று தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர்; இறந்தவரின் முகத்தைப் பார்த்ததும் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!



nurse treated her husband without knowing

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக பிரதிநிதி சீனிவாசன், இவருக்கு வயது 51. இவரது மனைவி சிவகாமி ஓமலூர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். 14 வயதில் ஹேமவாணி என்ற மகளும் இருக்கிறார்.

நேற்று மாலை தனது அக்காள் பூங்கோதையை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்ற சீனிவாசன், அவரை விட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். வரும் வழியில் அவர் வந்த மோட்டார் பைக்கில் பின்னர் வந்த கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சீனிவாசன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியுள்ளார். அங்கு இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரது மனைவி சிவகாமி வழக்கம்போல் ஓமலூர் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்துள்ளார். விபத்தில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சீனிவாசனை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அவரது மனைவி சிவகாமி மருத்துவர்களுடன் அருகில் இருந்துள்ளார். அவரது முகம் துணியால் மூடப்பட்ட நிலையில் இருந்ததால் சிகிச்சை அளிப்பது தனது கணவருக்கு தான் என்பது சிவகாமிக்கு தெரியாது.

omaloor nurse

அப்போது சீனிவாசனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதன் பிறகு தலையில் கட்டியிருந்த துணியை அவிழ்த்தபோது தான்  சிவகாமிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தான் இவ்வளவு நேரம் சிகிச்சை அளித்து தனது கணவருக்கு தான் என்று அறிந்ததும் அவரின் உடலை கட்டிப்பிடித்து கதறி அழத் தொடங்கினார். இதைப் பார்த்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிவகாமிக்கு ஆறுதல் கூறினர்.