விடுதி காப்பாளரால் பார்வையற்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை; உண்மையை மறைக்க விடுதி உரிமையாளர் செய்த விபரீதம்!!
மத்திய பிரதேசம் குவாலியர் அருகில் ஸ்நேகலயா என்ற தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் இயங்கி வரும் காப்பகத்தில் பல்வேறு ஊனமுற்ற இளம்பெண்கள் தங்கி வருகின்றனர். இதன் இயக்குனராக டாக்டர் பி கே சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த காப்பகத்தில் இருந்து போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, காவலர்கள் இந்த காப்பகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதில் மிகவும் கொடுமையான சம்பவம் என்னவெனில் பேச்சு மற்றும் பார்வை இழந்த 24 வயது இளம்பெண் அங்கு உள்ள விடுதி காப்பாளரால் மூன்று மாதங்களுக்கு முன்பு பலாத்காரம் செய்யப்பட்டது தான். இந்த சம்பவத்தை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அறிந்த விடுதியின் இயக்குனர் பீகே ஷர்மா அந்த இளம் பெண்ணின் கருவை கலைத்துள்ளார். மேலும் அந்தக் கருவை விடுதியில் பின்புறமுள்ள தோட்டத்தில் எரித்துள்ளனர்.

இந்த உண்மையானது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அலுவலகத்தின் மூலம் நடைபெற்ற ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் அந்த இளம்பெண் விடுதி காப்பாளர் சாஹீப் சிங்க் மூலம் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சாஹீப் சிங்க் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த உண்மையை மறைக்க உதவியாய் இருந்த விடுதியின் இயக்குனர் பிகே ஷர்மா மற்றும் அவரது மனைவி பாவனா ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 9 பேர் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாகியுள்ள அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை பற்றி தெரிவித்த போலீசார், விடுதியில் மேலும் அனைத்து பெண்களிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் இதே போன்று வேறு ஏதேனும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுவதாக கூறியுள்ளார்.