R15 பைக்கில் சென்ற இளம்பெண்ணை ஆக்ட்டிவாவில் பின்தொடர்ந்த இளைஞர்; பெண்ணின் கையால் அடி வாங்கிய பரபரப்பு சம்பவம்!!

சென்னையில் மது போதையில் நடுரோட்டில் இளம் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த இளைஞன் அந்த பெண்ணால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டி அருகே சர்தார் பட்டேல் சாலையில் ஒரு இளம் பெண் R15 பைக்க்கை நேற்று ஓட்டிச்சென்றுள்ளார். அதே சாலையில் ஆக்ட்டிவாவில் வந்த இளைஞர் அந்த பெண்ணை வெகு தூரமாக பின்தொடர்ந்து வந்துள்ளார்.
அந்த பெண்ணின் அருகில் வந்த அந்த வாலிபர் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் அந்த பெண்ணை வண்டியில் செல்லும்போதே கையை பிடித்து இழுத்துள்ளார். மேலும் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி ஆபாச வார்த்தைகளால் பேசி அவரிடம் சில்மிஷம் செய்ய முயற்சித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் அந்த இளைஞரை தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை கண்ட அந்த வழியில் வந்தவர்கள் அந்த இளைஞரை கண்டித்துள்ளனர். ஆனால் மது போதையில் இருந்த அந்த இளைஞன் யாருடைய பேச்சையும் கேட்கவில்லை. இதனை தொடர்ந்து அங்கிருந்த ஒரு நபர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் அங்கு வந்த காவல்துறை அதிகாரி அந்த இளைஞரை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தார்.