குளத்தில் மூழ்கி உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தம்பிகள்! திண்டிவனத்தில் நடந்த சோகம் சம்பவம்4 students drowned in dindivanam

திண்டிவனம் அருகே தளவாதி என்ற கிராமத்தில் குளத்தில் குளிக்க சென்ற 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் 4 பேரும் 2 குடும்பத்தை சேர்ந்த அக்கா - தம்பிகள் என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவரது மகள் அபிராமி அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் தனது தம்பி திருமுருகனை அழைத்து கொண்டு குளித்தில் குளிக்க சென்றார். அப்போது முனுசாமி என்பவரின் மகள் அஸ்வினியும் (15) அவரது தம்பி ஆகாஷூம் (9)  அவர்களோடு சேர்ந்து குளிக்க வந்துள்ளார்கள். 

dindivanam

2 அக்கா, 2 தம்பிகள் ஒன்றாக சேர்ந்து நெடுநேரமாக குளத்தில் குளித்துள்ளனர். குளிக்க சென்ற பிள்ளைகள் நெடு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. அவர்களை தேடி குழந்தைகளின் பெற்றோர்கள் குளத்திற்கு வந்து பார்த்துள்ளனர். ஆனால் அவர்களை அங்கு காணவில்லை. இதனால் குழந்தைகள் குளத்தில் மூழ்கியிருக்கலாம் என 4 போரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. 

நீண்ட நேரத்துக்கு பின்பு 4 பேரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குளத்தில் நிறைய சேர் இருந்ததால், பிள்ளைகள் சிக்கி கொண்டுள்ளார்கள். இதனால் ஒருவரையொருவர் காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை என கூறப்படுகிறது. இரண்டு குடும்பத்தை சேந்த அக்கா-தம்பிகளான 4 பேரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.