பெண்ணுக்கு பெண் மீது ஆசை எதனால்?.. லெஸ்பியன் உறவால் எய்ட்ஸ் வருமா?.!

பெண்ணுக்கு பெண் மீது ஆசை எதனால்?.. லெஸ்பியன் உறவால் எய்ட்ஸ் வருமா?.!


Lesbian Life Relationship Tamil

லெஸ்பியன் உறவுகள் என்பது தற்போது பரவலாக சமூகத்தில் தலைதூக்கி பார்க்க தொங்கிவிட்டது. நன்றாக பழகி வரும் இரண்டு பெண் தோழிகள், ஒருகட்டத்தில் தங்களை அறியாமலேயே காதல் வயப்பட்டுவிடுகின்றனர். பெண் தோழிகள் இருவரும் சகஜமாக பழகி வருகிறார்கள் என்று பெற்றோர்கள் நினைக்கும் தருவாயிலும், அவர்களுக்குக்குள் காதல் துளிர்விட்டபின்னர் தான் ஓர்பாலின ஈர்ப்பு காதல் பற்றி அவர்களுக்கே புரிகிறது. 

இந்த விஷயம் தொடர்பாக பாலியல் மருத்துவர்களிடம் கேட்கையில், "பெண்ணொருவர் தன்னை லெஸ்பியன் என்று வெளிப்படையாக கூற இயலாது. ஆண் தன்னை ஓரினசேர்கையாளர் என்று அடையாளப்படுத்த ஏற்படும் சிக்கலே லெஸ்பியன் உறவுகளிலும் ஏற்படுகிறது. அவ்வாறு தன்பாலின ஈர்ப்பு குறித்து பெண்கள் தெரிவித்தால், அவர்கள் பிறந்த வீட்டில் வாழ்வது கடினமாகிவிடும். தன்பாலின ஈர்ப்பு உறவுகளை ஏற்றுக்கொள்ளும் அளவில் நமது சமூக கட்டமைப்புகள் இல்லை. இயற்கையின் சமநிலையில் இதனை பார்த்தால், அது இயற்கைக்கு எதிரானது என்றும் கூற இயலாது. சிலர் தன்பாலின ஈர்ப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வருகின்றனர்.

18 plus

மாலினி ஜீவரத்தினம் என்பவர் லெஸ்பியன் உறவு தொடர்பாக Ladies and Gentle Woman என்ற ஆவணப்படத்தை இயக்கி இருக்கிறார். அதில், தன்பாலின ஈர்ப்புள்ள பெண்கள், அதனை வெளிக்கொணர இயலாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். வெளியே விஷயம் தெரிந்தால் கொலையும் செய்யப்படுகிறார்கள். தன்பாலின ஈர்ப்பு என்பது சட்டப்படி குற்றமல்ல என்று சட்டதிருத்தமும் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இயற்கைக்கு மாறானவர்கள் கிடையாது. அவர்களின் பாலுணர்வும் மதிக்கப்படவேண்டிய விஷயம் ஆகும். 

சமூக மாற்றங்கள் ஏற்பட்டு வரும் தற்போதைய காலத்தில் லெஸ்பியன் உறவுகள் குறித்தும், தன்பாலின ஈர்ப்பு குறித்தும் பேசவேண்டும். லெஸ்பியன் உறவு இயல்பு என்பதை எல்லோரா, கஜீராகோ சிற்பங்கள் உணர்த்துகிறது. ஆண்களுக்கு இடையேயான ஹோமோ, லெஸ்பியன் உறவுகள் தொடர்பான கலாச்சாரம் இன்றளவில் அதிகரித்துள்ளது. இவர்கள் திருமணம் செய்து வாழ சில நாடுகள் அங்கீகாரம் அளிக்கிறது. இவர்கள் திருமணத்திற்கு பின்னர் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கவும் விரும்புகிறார்கள். 

18 plus

பெண்ணிற்கும் - பெண்ணிற்கும் இடையே ஏற்படும் ஈர்ப்புக்கு காரணம் ஹார்மோன்கள். லெஸ்பியன் ஈர்ப்பு என்பது அனைத்து காலத்திலும் இருந்து வருகிறது. லெஸ்பியன் உறவுகளில் 10 % முதல் 15 % வரையிலான பெண்கள் உணர்வை பெறுகின்றனர். தனக்கு பிடித்த பெண்களை காட்டிக்கொள்வது, முத்தமிடுவது தற்போது அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் நடந்த ஆய்வில் 60 % பெண்கள் பிற பெண்களிடம் ஈடுபாடு கொண்டதாக தெரியவருகிறது. இவர்களில் 45 % பெண்கள் பிற பெண்களை முத்தமிட்டுள்ளனர். 50 % பெண்கள் பிற பெண்களுடன் உறவு வைத்துள்ளனர். 

பெண்ணும் - பெண்ணும் காம உணர்வை எட்டும் போது, பெண்களுக்கு கூடுதல் இன்பம் கிடைக்கிறது என்றும், இருவரும் தங்களுக்கு பிடித்த விஷயங்களை தயக்கமின்றி கேட்டு தாம்பத்தியத்தில் ஈடுபடுகிறார்கள். இதனால் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு தாம்பத்தியம் மேற்கொள்வதால், இருவருக்கும் அதிகளவு இன்பம் கிடைக்கிறது. இதனால் லெஸ்பியன் உறவுகளில் அதிகளவு இன்பம் பெண்ணுக்கு கிடைக்கிறது. இயல்பான ஆண் - பெண் தாம்பத்தியத்தில் ஆணின் ஆதிக்க மனப்பான்மை வெளிப்படுகிறது. பெண்ணை தனது இன்பத்திற்காக தயார்படுத்தி, தனது இன்பத்தை அடைவதில் ஆண் கவனம் செலுத்துகிறான். தனது துணை எங்கு இன்பம் அடைகிறாள்? எவையெல்லாம் அவளுக்கு பிடிக்கும்? என்று கேட்பதும் இல்லை, சொல்வதும் இல்லை. இது ஆண் - பெண் உறவில் விரிசலை பின்னாளில் ஏற்படுத்துகிறது.

18 plus

மேலும், பெண்ணை ஆண் கையாளும் போது அவனின் முரட்டுத்தனம் தாம்பத்தியம் மீதான வெறுப்பை ஏற்படுத்துகிறது. லெஸ்பியன் உறவுகளில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதால், இருவரும் மகிழ்ச்சியில் தாம்பத்தியம் மேற்கொண்டு இருவரும் உச்சகட்டம் எனும் ஆர்கஸத்தை அடைகின்றனர். லெஸ்பியன் உறவுகளை சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், பெண்கள் மத்தியில் ரகசியமான உறவாக இவை உள்ளன. திருமணத்திற்கு பின்னரும் ஆண் - பெண் தாம்பத்தியத்தில் திருப்தி ஏற்படாத பெண்கள், லெஸ்பியன் உறவுகளில் ஆர்வம் காண்பிக்க வாய்ப்புகள் உள்ளன. லெஸ்பியன் உறவுகளில் பெண்களுக்கிடையே சுதந்திரம் இருப்பதால், இன்பத்தை தோழியிடம் தேவையானதை கூறி கேட்டு பெறுகிறார். வைப்ரேட்டர் போன்ற கருவிகளையும் உபயோகம் செய்கின்றனர். 

ஆண் - பெண் உறவுகளில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். லிவிங் டுகெதர் வாழ்கை முறையாக இருந்தாலும், அங்கும் ஆதிக்க மனநிலை வந்துவிடுகிறது. ஆண்களுடன் உறவு மேற்கொள்ளும் போது கர்ப்பமாகும் வாய்ப்புகள் குறித்தும் பெண்கள் அச்சப்படுகின்றனர். தனிமையில் இன்பத்தை தேடி செல்வதால், கர்ப்ப விஷயம் பின்னாளில் பிரச்னையாகலாம் என்றும் சிந்திக்கின்றனர். இதுபோன்ற பல்வேறு சிந்தனைகள் பெண்களை லெஸ்பியன் உறவுப்பக்கம் அழைத்து செல்கிறது. இதனைப்போல, சிறுவயதில் பெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் நேரத்தில், ஆண்களை பார்த்தாலே அவர்களுக்கு வெறுப்பு ஏற்படும். அவர்களின் அனுபவம் ஆணுடன் மேற்கொள்ளும் தாம்பத்திய உறவை வெறுக்க வைக்கிறது.

18 plus

இளம் வயதில் விடுதிகளில் தங்கி பயின்று வரும் பெண்களும் லெஸ்பியன் உறவுகளில் சிக்கும் அபாயம் உள்ளது. பருவ வயதில் ஏற்படும் ஆர்வம், குழப்பமான பல கட்டுக்கதைகள் போன்றவை அதனை அதிகரிக்க உதவி செய்கிறது. பெண்ணுக்கு பெண் மீது ஏற்படும் ஈர்ப்புக்கு ஹார்மோனும் காரணமாக அமையும் பெண்களும் லெஸ்பியன் உறவுகளில் சிக்குகின்றனர். இதனால் இன்பம் கிடைத்தாலும், வெளியே விஷயம் தெரிந்தால் என்னவாகும் என்ற பயமும் ஏற்படும். திருமணத்திற்கு பின்னர் லெஸ்பியன் உறவு நடந்து வந்தாலும், விஷயம் தெரிந்தால் கணவன் - மனைவி உறவு பாதிக்கப்பட்டு, குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது. எதோ ஒரு சூழ்நிலையில் லெஸ்பியன் உறவில் ஒரு பெண் வெளிவர நினைத்தாலும், அவரது பார்ட்னர் அவரை தொடர்ந்து தொந்தரவு செய்யவும் வாய்ப்புகள் அதிகம். 

லெஸ்பியன் உறவில் இருந்து விடுபட்டு வெளியே வர முயற்சித்தால் அதற்கென ஹார்மோன் சிகிச்சை மற்றும் உளவியல் சிகிச்சைகள் உள்ளன. பதின்ம வயதில் படிக்கும் லெஸ்பியன் உறவு குறித்த விஷயங்கள், பெண்களின் கல்வி வளர்ச்சியை பாதிக்கலாம். அதனைப்போல, எய்ட்ஸ் தொற்று பரவவும் வாய்ப்புள்ளது. இதனால் கவனமுடன் செயல்பட வேண்டும்" என்று மருத்துவர் தெரிவிக்கிறார்.