காதல் – உறவுகள் 18 Plus

விந்தணுக்களின் எண்ணிக்கை, தரத்தை உயர்த்த கட்டாயம் சாப்பிட வேண்டியது என்ன?.!

Summary:

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முட்டை, கீரை, மாதுளை உட்பட 10 க்கும் மேற்பட்ட உணவுகளை சாப்பிடலாம். முழு விபரத்திற்கு கீழே படிக்கவும்.

நமது அன்றாட வாழ்க்கையில் நாம் பலவிதமான உடலுக்கு சத்துக்களை வழங்கும் காய்கறிகள், கனிகளை சாப்பிடுவோம். சிலர் பல்வேறு காரணங்களை கூறி, உடல்நலத்தை கூட பேணாமல், சாப்பிடாமல் இருந்து வருகின்றனர். இந்த சூழலில், விந்தணுக்களை அதிகரிக்க எளிமையான உணவுகள் குறித்து இன்று காணலாம்.

முட்டை : 

புரதசத்து நிறைந்த உணவாக இருக்கும் முட்டையில், விந்தணுக்களை அதிகரிக்க செய்யும் சக்தி உள்ளது. விந்தணுவில் இருக்கும் ப்ரீ ரேடிகள் (Free Radical) சேதப்படுத்தப்படும் பட்சத்தில், அதனை பாதுகாத்து விந்தணுக்களின் இயக்கத்தை மேம்படுத்துகிறது. மேலும், வலுவான, ஆரோக்கியமான விந்தணுக்களை உற்பத்தி செய்யவும் உதவுகிறது. 

வாழைப்பழம் : 

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, பி 1, சி போன்றவை உடலின் ஆரோக்கியத்திற்கும், விந்தணுக்களின் வலுவை அதிகரிக்கவும் உதவி செய்கிறது. இதில், வைட்டமின் மட்டுமல்லாது, ப்ரோம்லைன் (Bromelain) என்ற அறிய நொதியும் உள்ளது. இது விந்தணுக்களின் தரத்தை உயர்த்துகிறது. 

கீரை : 

கீரை சார்ந்த உணவுகள் விந்தணுக்களின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு உதவும் போலிக் அமிலத்தை கொண்டுள்ளது. இதனை உட்கொள்வதால் அசாதாரண விந்தணு எண்ணிக்கையை குறைத்து, தரமான விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும், பெண்ணின் கருமுட்டையை வெற்றிகரமாக விந்து ஊடுருவதை உறுதி செய்கிறது.

டார்க் சாக்லேட் :  

டார்க் சாக்லேட்டில் இருக்கும் எல் - ஆர்ஜினைன் எச்.சி.எல் அமினோ அமிலம் அதிகளவில் உள்ளது. இது விந்தணுவின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறது. 

இதனைப்போல, மாதுளை, வால்நட், பூசணி விதைகள், பூண்டு, வெந்தயம் மற்றும் அஸ்பாரகஸ் (Asparagus) போன்றவையும் விந்தணுக்களின் எண்ணிக்கை, தரம், உறுதி போன்றவற்றை உயர்த்தும்.


Advertisement