கர்ப்பகாலத்தில் தம்பதிகள் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா?.. நல்லது என்ன?..!

கர்ப்பகாலத்தில் தம்பதிகள் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா?.. நல்லது என்ன?..!



During Pregnancy time sexual intercourse tamil

திருமணத்திற்கு பின்னர் முதல் கர்ப்பத்தை சந்திக்கும் தம்பதிக்கு, பொதுவாக ஏற்படும் சந்தேகமாக கர்ப்பகாலத்தில் உடலுறவு கூடலாமா? என்பது தான் இருக்கிறது. கர்ப்பகாலத்தில் பெண்கள் மனதளவில் மாற்றங்களை சந்திக்கின்றனர். இதனால் அவர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகாமல் சென்றால், அது மன அதிருப்தியை ஏற்படுத்தும். இது கருவில் உள்ள சிசுவையும் பாதிக்கும். 

கர்ப்ப காலத்தில் தாம்பத்தியம் தேவைப்பட்டால், தம்பதிகள் ஒத்த மனதுடன் செயல்பட வேண்டும். கணவன் எந்த சமயத்திலும் கர்ப்ப காலத்திலும் சரி, பிற சமயத்திலும் சரி உறவுக்கு வற்புறுத்த கூடாது. கர்ப்பகாலத்தில் மனைவியுடன் தாம்பத்திய ரீதியாக நெருங்கி இருக்க வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. 

அன்பு, அரவணைப்பு, முத்தம் போன்றவையும் இருவரையும் மனதளவில் புரியவைத்து வாழ்க்கைக்கு வழிவகை செய்யும். கர்ப்பகாலத்தில் பெண்களும் பெரும்பாலும் அவற்றையே விரும்புவார்கள். கர்ப்ப காலத்தில் இருவரும் விருப்பப்பட்டு தாம்பத்தியம் மேற்கொண்டால், ஆண் மேலே, பெண் கீழே என்ற நிலை தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும். 

இருவரும் அமர்ந்த நிலையில் அல்லது ஆணின் மீது பெண் என்ற நிலையில் தாம்பத்தியம் வைத்துக்கொள்ளலாம். இதனால் வயிற்றில் அழுத்தம் இருக்காது. கர்ப்பகால தாம்பத்தியம் மேற்கொண்டால் நிதானமாக மற்றும் மெதுவாக கணவர் செயல்படுவது குழந்தை மற்றும் மனைவியின் உயிருக்கு நல்லது. 

கருத்தரித்த 12 வாரங்கள் வரை தாம்பத்திய உறவை தவிர்க்கலாம். அக்காலத்தில் உறவு கொண்டால் கருச்சிதைவு ஏற்படும். இதனைப்போல, கர்ப்பத்தின் இறுதி 2 மாதங்கள் தாம்பத்தியத்தை தவிர்க்கலாம். அந்த சமயத்தில் உறவு கொண்டால் பனிக்குடம் உடைய வாய்ப்புள்ளது. கர்ப்பகாலத்தின் 5 முதல் 7 ஆவது மாதத்திற்குள் உறவு வைத்துக்கொள்ளலாம். 

பெண்ணின் மனதை புரிந்தவருக்கு கர்ப்ப காலத்தில் அவருடன் ஆதரவாக இருப்பதே சாலச்சிறந்தது. பெண்ணுக்கு விருப்பம் இருப்பின் ஆபத்தில்லாத தாம்பத்தியம் மேற்கொள்ளலாம்.