என்னது 10 நிமிடம் போதுமா?.. தாம்பத்திய உறவு ஆராய்ச்சியில் வெளியான ருசிகர தகவல்.!
மகிழ்ச்சியான தாம்பத்திய உறவிற்கு 10 நிமிட உறவே போதும் என ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தாம்பத்தியம் சின்னசின்ன சீண்டலில் தொடங்கி உச்சத்திற்கு செல்லும். இதற்கு காலமும் இல்லை, நேரமும் இல்லை. தம்பதிகளின் விருப்பமே இங்கு நிலையாக இருக்கிறது. திருப்தியான உறவு 10 நிமிடத்தில் நடந்தால் அதுவே போதுமானது என்கிறது ஆய்வு. இந்த விஷயம் தொடர்பாக 50 பேரிடம் ஆய்வு மேற்கொண்டதில், அவர்களுக்கு மகிழ்ச்சியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிடம் போதுமானது என்பது தெரியவந்துள்ளது.
தாம்பத்தியத்தில் 1 நிமிடம் முதல் 2 நிமிடம் என்பது பிரயோஜனம் இல்லாதது ஆகும். மன ரீதியாக மற்றும் உடல் ரீதியாக சிக்கல் உள்ளது என்பதற்கு சாட்சியாக 1 நிமிட தாம்பத்தியம் உறுதி செய்கிறது. அதனைப்போல 3 நிமிடம் முதல் 7 நிமிடம் வரை இருப்பது சாதாரணமான உறவு ஆகும்.
முத்தம், சீண்டல், முன்விளையாட்டு இல்லாமல் 10 நிமிட தாம்பத்தியம் என்பது இருவருக்கும் போதுமானது. இதில் முன்-பின் விளையாட்டுகளை சேர்த்தால் அது அரைமணிநேரத்தில் இருந்து ஒருமணிநேரம் வரை செல்லும். தாம்பத்தியம் என்பது இருவரும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இணைவது ஆகும். அதனை மகிழ்ச்சியாக ஏற்று செயல்படுவது அவசியம்.