வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
அச்சச்சோ.. தாம்பத்தியத்தில் தவிர்க்க வேண்டியவை இவ்வுளவு இருக்கா?.. தம்பதிகளே தெரிஞ்சுக்கோங்க.!
தாம்பத்தியத்தில் தம்பதிகள் பல்வேறு விஷங்களை புரிந்துகொள்ளவேண்டியுள்ளது. இதில், உறவுக்கு முன், உறவுக்கு பின் என பல காரணத்துடன் உள்ள தகவலை தெரிந்துகொண்டோமேயானால், கட்டில் இன்பத்தில் நமது துணையை நன்றாக பார்த்துக்கொள்ளலாம். அந்த வகையில், தாம்பத்தியத்திற்கு பின்னர் தவிர்க்க வேண்டிய விஷயம் குறித்து பாலியல் மருத்துவர்கள் கூறும் தகவல்கள் பின்வருமாறு.,
உறங்க செல்வது:
தம்பதிகளில் பலருக்கும் பொதுவாக உள்ள பிரச்சனை, தாம்பத்தியம் முடிந்ததும் இருவர் அல்லது ஒருவர் உறங்க செல்வது. இது தாம்பத்தியத்தின் வசீகரத்தை குறைக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தாம்பத்திய செயல்பாடுகள் முடிந்ததும் உறங்காமல் சிறிது பேசி மகிழ்ந்து, கொஞ்ச நேரம் கழித்து முடிந்தால் குளித்துவிட்டு உறங்கலாம்.
குளியலறை பயணம்:
தாம்பத்தியத்திற்கு பின்னர் குளித்து உடலை தூய்மை செய்வது நன்மை என்றாலும், இருவரும் குளிக்க சென்றால் நலம். ஆனால், உடனடியாக குளியலறைக்கு செல்ல தேவையில்லை. ஆகையால் இருவரும் பேசிக்கொண்டு பரஸ்பரம் குளிக்க விருப்பம் இருப்பின் செல்லலாம்.
நண்பர்களின் அழைப்பு:
பல தம்பதிகள் தாம்பத்தியத்தின் போது உடலுறவுக்கு பின்னர் தனது நெருங்கிய தோழன் அல்லது தோழியை அழைத்து பேசுவது சமீபத்தில் அதிகரித்துள்ளது. வீட்டில் இருந்தவாறு வேலையை கவனிக்க வேண்டும் என்ற விஷயம் நம்மிடையே அறிமுகமாகி, அது அந்தரங்க வாழ்க்கையிலும் பிரதிபலிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் தாம்பத்தியம் கூடும் வேளைகளில் செல்போனை அறவே தூர ஒதுக்குவது நல்லது.
படிப்பு:
தம்பதிகளின் மனதில் தாம்பத்தியத்தின் போது எந்த மாதிரியான எண்ணம் ஓடும் என்பது விடைதெரியா மர்மமே. தாம்பத்தியத்திற்கு பின்னர் படிப்பு அல்லது வேலையை கவனிக்க சென்றால் அது துணையின் மனதை வெகுவாக பாதிக்கும். அவர்களுக்கான நேரத்தை அவர்களுடன் செலவழிக்க வேண்டும்.
தனித்தனியே உறக்கம்:
தம்பதிகள் இயல்பாக தனியே உறங்குவது வழக்கமாக இருக்கலாம். ஆனால், தாம்பத்தியம் கூடிய இரவிலும் தனித்தனியே உறங்குவது அல்லது தாம்பத்தியம் கூடிய பின்னர் தனியே உறங்க செல்வது நல்லதல்ல.
குழந்தைகள்:
தனிமையின் அந்தரங்க சூழ்நிலையில் பிறர் வருவது அதன் தனித்துவத்தை சிதைக்கும். தம்பதிகளுக்கு குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அவர்களை உறங்கவைத்துவிட்டு அல்லது உறவினரின் வீட்டில் குழந்தையை உறங்கவைத்து தாம்பத்தியம் வைத்துக்கொள்வது நல்லது.
எது எப்படியிருப்பினும் தாம்பத்திய விஷயத்தில் தம்பதிகள் கட்டாய தாம்பத்தியத்திற்கு ஒருதுணை மற்றொரு துணையை உள்ளாக்கக்கூடாது. இது தாம்பத்தியத்தின் மீதான வெறுப்பை ஏற்படுத்தி வாழ்க்கையை பிரச்னைக்குள்ளாக்கும். தாம்பத்தியத்தின் போது துணைக்கு விருப்பமில்லாத நிலையை அல்லது புணர்ச்சியை மேற்கொள்ள கூடாது.
அதனைப்போல, தனக்கு விருப்பமுள்ளதை இருபாலரும் கேட்டு தெரிந்துகொண்டு தனது துணையின் உச்சகட்டத்திற்கு உதவி செய்தால் அதுவே திருப்தியான தாம்பத்தியமாக அமையும்.