உலகம்

கழுதைக்கும், வரிக்குதிரைக்கும் பிறந்த அரியவகை உயிரினம்! குட்டியின் பெயர் என்ன தெரியுமா?

Summary:

Zebra donkey mixed baby animal name zonkey

கென்ய நாட்டின் சாவோ கிழக்கு தேசிய பூங்காவில் இருந்து  கடந்த மே மாதம் பெண் வரிக்குதிரை ஒன்று தப்பி ஓடியுள்ளது. இந்த குதிரை அருகேயுள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. அங்கு  ஆண்கழுதையுடன் கலப்பினத்தில் ஈடுபட்டுள்ளது. அதனை தொடர்ந்து சில நாட்களுக்கு பிறகு பூங்கா நிர்வாகத்தினர் வரிக்குதிரையை பிடித்து கொண்டு வந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கர்ப்பமாக இருந்த வரிக்குதிரை சமீபத்தில்  குட்டியை ஈன்றது. இந்த குட்டியின் கால்கள் வரிக்குதிரை போலவும் உடல் கழுதை போலவும் வித்தியாசமான விலங்காக இருந்துள்ளது. இந்த விலங்கிற்கு ஸோங்கி(zonkey) என பெயர் வைத்துள்ளனர். 

இதுகுறித்து ஷெல்ட்ரிக் வைல்ட்லைஃப் ட்ரஸ்ட், (Sheldrick Wildlife Trust) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும்  இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement