#BigNews: பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட முதல் மனிதர், 2 மாதத்தில் மரணம்.. மருத்துவ வட்டாரத்தில் பேரதிர்ச்சி.!

#BigNews: பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட முதல் மனிதர், 2 மாதத்தில் மரணம்.. மருத்துவ வட்டாரத்தில் பேரதிர்ச்சி.!


World First Pig Heart Transplant Human America David Bennett Dies After 2 Months

உலக மருத்துவ வரலாற்றில் முதன் முதலாக பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட அமெரிக்கர், 2 மாதங்களில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். 

அமெரிக்காவில் வசித்து வந்தவர் டேவிட் பென்னட் (வயது 57). இவருக்கு இதய நோய்ப்பாதிப்பு இருந்ததால், வாழ வேண்டும் என்ற ஆசையில் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக பதிவு செய்து இதயத்திற்காக காத்திருந்தார். அமெரிக்காவிலோ வருடத்தில் 1.20 இலட்சம் பேர் இதய நோயால் உயிரிழக்கின்றனர் என்ற நிலையில், இதயம் கிடைப்பதில் பெரும் சிக்கல் இருந்துள்ளது. 

இதனையடுத்து, பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொருத்தி பார்க்கலாம் என்ற ஆராய்ச்சி நடந்து வந்தபோது, அதனை டேவிட்டிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டேவிட்டும் பன்றியின் இதயத்தை தனக்கு பொறுத்த விருப்பம் தெரிவிக்கவே, அவருக்கு இதயம் வழங்கப்படும் பன்றி தேர்வு செய்யப்பட்டு, அது மனிதருக்கு பொருத்தினால் சரியாக இயங்கும் வகையில் மரபணு மாற்றங்களும் செய்யப்பட்டன. 

world

கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக மேரிலாந்தில் உள்ள மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் வைத்து பன்றியின் இதயம் டேவிட் பென்னட்டுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இதனால் அவர் பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட முதல் மனிதர் என்ற பெருமையை பெற்றார். அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் மருத்துவர்களின் கண்காணிப்பில் டேவிட் இருந்து வந்த நிலையில், தற்போதும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாவே அவரின் உடல்நலம் மோசமடைந்த நிலையில், நேற்று அவரின் உயிர் பிரிந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பன்றியின் இதயத்தை பொருத்திய மனிதர் 2 மாதத்தில் தனது உயிரை இழந்துள்ளார். அவரின் மரணத்திற்கான காரணம் தொடர்பாக மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது.