19 ஆண்டுகளாக திருடிய பொருட்களை ஆன்லைனில் விற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பெண்.!woman-selling-stolen-goods-on-ebay

அமெரிக்க நாட்டில் டெக்சாஸ் நகரில் வசித்துவந்த கிம் ரிச்சர்ட்சன் என்ற 63 வயதான பெண் ஒருவர் கடைகளிலிருந்து திருடிய பொருட்களை eBay என்ற ஆன்லைன் தளத்தில் விற்று வந்துள்ளார். அவர் பல வருடங்களாக இதனையே தொழிலாக செய்துவந்துள்ளார். அவ்வாறு சம்பாதித்த பணத்தை வைத்து அப்பெண் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

இதே தொழிலை தொடர்ந்து 18 வருடத்திற்கு மேல் செய்து சொகுசுவாழ்க்கை வாழ்ந்துவந்த கிம் ரிச்சர்ட்சன் குறித்த தகவல் தெரிந்த போலீசார், அவரை தேடிவந்துள்ளனர். இந்தநிலையில் அவர் சமீபத்தில் போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார். இதனையடுத்து போலீசரிடம் சிக்கிய அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  

theft

அவரிடம் நடத்திய விசாரணையில் தான் செய்த அணைத்து குற்றத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார் கிம் ரிச்சர்ட்சன். இதையடுத்து கிம் ரிச்சர்ட்சனுக்கு  54 மாதங்களுங்கு சிறைத்தண்டனை கொடுத்து உத்தரவிட்டனர். மேலும், இதுவரை திருடப்பட்ட பொருட்களுக்கு இழப்பீடாக 3.8 மில்லியன் டாலர் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளனர்.