பெண்ணின் மார்பகத்தை துளைக்க முடியாமல் சிக்கி இருந்த துப்பாக்கி குண்டு.! சோதனையின்போது தெரியந்த அதிர்ச்சி தகவல்.



woman-saved-from-random-shooting-when-breast-implant-de

செயற்கையாக பொருத்தப்பட்ட மார்பகம் ஒன்றினால் இளம் பெண் ஒருவர் துப்பாக்கி சூட்டில் இருந்து உயிர் பிழைத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

2018 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் பற்றி, அந்த பெண்ணிற்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர் தனது கட்டூரை ஒன்றின் மூலம் இந்த தகவலை தற்போது வெளியே கூறியுள்ளார். அதன்படி, கனடாவின் டொரன்டோ நகரை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் காலையில் தனது வீட்டின் அருகில் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

அப்போது திடீரென அவரது மார்பகத்தில் லேசாக வலி ஏற்படுவதை உணர்ந்த அந்த பெண் மார்பகத்தை தொட்டு பார்த்தபோது இரத்தம் கசிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த பெண்மணிக்கு இடது மார்பகத்தில் துப்பாக்கி குண்டு ஊடுருவ முயன்றிருப்பதும், ஆனால் மார்பகத்தில் உள்ளே புக முடியாமல் மின்னல் வேகத்தில் அந்த குண்டு விலகி வலது மார்பகத்தில் லேசாக உரசி அங்கையே சிக்கி இருந்ததையும் கண்டுபிடித்தனர்.

Mysterious

அந்த பெண் செயற்கையாக செய்யப்பட்ட சிலிகான் மார்பகங்களை பொருத்தியிருந்ததால் துப்பாக்கி குண்டினால் அவரது மார்பகத்தை துளையிட்டு உள்ளே புக முடியாமல் வெளியே சிக்கி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். அந்த பெண் நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது அந்த பகுதியில் நடந்த ஏதேனும் சண்டை அல்லது, கலவரத்தில் துப்பாக்கி குண்டு இந்த பெண்ணை தாக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

அந்த பெண் செயற்கையான மார்பகங்களை பொறுத்தாமல் இருந்திருந்தால் அந்த பெண் அதே இடத்தில் உயிர் இழந்திருப்பார் என அந்த மருத்துவர் தனது கட்டூரையில் கூறியுள்ளார்.