தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க, இந்த மாஸ்க் அணியுங்கள் - உலக சுகாதார நிறுவனம்.!
உலக நாடுகளிடையே பரவி வரும் கொரோனாவின் உருமாறிய ஒமிக்ரான் வகை வைரஸ் பரவலை தடுக்க என் 95 மற்றும் எப்.எப்.பி.2 வகை மாஸ்க்கை பயன்படுத்தலாம் என டபிள்யூ.எச்.ஓ அறிவித்துள்ளது.
கடந்த 2019 ஆம் வருடம் சீனாவின் உகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், 2 வருடமாக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. உலக நாடுகளே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிக்கொண்டு தவித்து வருகிறது. இதனால் பெரும் உயிரிழப்பும், பொருளாதார சேதமும் ஏற்பட்டுள்ளது.
வல்லரசு நாடுகளில் உள்ள மருத்துவ கட்டமைப்பும் மேலும் உயர்த்தப்படவேண்டும் என்பதை உணர்த்துவது போல, வல்லரசு நாடுகளில் இருக்கும் மக்கள் கொத்துக்கொத்தாக மடிந்து வருகின்றனர். தினமும் கோடிக்கணக்கோனோர் உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு நாட்டிலும் பரவி வரும் கொரோனா வைரஸ், அந்தந்த நாடுகளுக்கு ஏற்றாற்போல தனது தகவமைப்பை மாற்றிக்கொண்டு பரவி வருகிறது. தற்போது, தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் ஒமிக்ரானாக பரவி வருகிறது. இது உருமாறிய கொரோனாவின் டெல்டா வகையை விட அதிவேகமாக பரவுகிறது என்றும் தெரியவந்துள்ளது.
ஒமிக்ரான் வகை பரவல் உறுதி செய்யப்பட்ட சில வாரத்திற்கு உள்ளாகவே, 89 க்கும் மேற்பட்ட நாடுகளில் அது பரவிவிட்டது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் ஒமிக்ரான் வகை பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "ஒமிக்ரான் வகை வைரஸ் பரவலை தடுக்க அறுவை சிகிச்சைக்கு பயன்படும் முகக்கவசம் பயன்படுத்த வேண்டும் என்றும், N95 மற்றும் FFP2 வகையிலான முகக்கவசம் ஒமிக்ரான் வகை வைரஸ் பரவலை குறைக்கும் வகையில், அதன் வடிகட்டுதலில் செயல்திறன் அமைப்பு உள்ளது.
ஆகையால், சுகாதார பணியாளர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் N95 மற்றும் FFP2 ரக முகக்கவசத்தை உபயோகம் செய்யலாம். சாதாரண முகக்கவசம் ஒமிக்ரான் பரவுதலை முழுவதுமாக கட்டுப்படுத்தாது. N95 போன்ற முகக்கவசம் ஒமிக்ரான் பரவுதலை கட்டுப்படுத்த அதிகளவு வாய்ப்புகள் உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டது.