மக்களே உஷார்.. இன்று இரவு 7 மணிமுதல் தப்பிதவறியும் வெளியே வந்துடாதீங்க - உச்சகட்ட எச்சரிக்கை.!

மக்களே உஷார்.. இன்று இரவு 7 மணிமுதல் தப்பிதவறியும் வெளியே வந்துடாதீங்க - உச்சகட்ட எச்சரிக்கை.!


Warning for tourists

 

உலகளவில் 2019ல் தொடங்கிய கொரோனா வைரஸ் பரவல் கடந்த ஆண்டில் தனது தாக்கத்தினை குறைந்துகொண்டாலும், தற்போது உருமாறிய BS7 கொரோனா பரவி வருகிறது. இதனால் சீனாவில் கொரோனா பரவல் மற்றும் உயிர்ப்பலி எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த தகவல்கள் சர்வதேச நாடுகளால் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மீண்டும் பரவலாக பல நாடுகளில் மினி ஊரடங்கு என்பது அமல்படுத்தப்படுகிறது. பண்டிகை காலங்களில் மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணிக்கு மேல் சென்னை கடற்கரை மற்றும் கடற்கரை சாலைகள் மூடபடப்படுகிறது. நாளை காலை 6 மணிவரை அப்பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மக்களுக்கு எந்த அனுமதியும் வழங்கப்படமாட்டாது. 

World news

அதேபோல், கலங்கரை விளக்கம் மற்றும் எளியட்ஸ் சாலையில் இரவு 8 மணிமுதல் காலை 6 மணிவரையிலும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. கொடைக்கானல் ஏரி, தென்காசி குற்றாலம் அருவிகளில் மக்கள், சுற்றுலாப்பயணிகள் வருகையை தடுக்க இரவு 7 மணிவரை காலை 7 மணிவரை தடை விதிக்கப்படுகிறது.

கொரோனா பரவலை தடுக்க தற்போது சிறிய அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கட்டுள்ளதாகவும், அதனை மக்கள் கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது.