"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
புதிய அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வாழ்க்கையில் இவ்வளவு சோகங்களாக!!! பாவம் அந்த மனுஷன்
புதிய அமெரிக்க அதிபராக பதவி ஏற்க இருக்கும் ஜோ பைடனின் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் சோக சம்பவங்கள் தற்போது இணையத்தில் அதிகம் பேசப்பட்டுவருகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்காவின் 46 வது அதிபராக அந்நாட்டின் ஜனநாயகட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஷ் வெற்றி பெற்றுள்ளார். இவர்கள் இருவரும் வெற்றிபெற்றதை அடுத்து இந்திய பிரதமர் உட்பட உலக தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.
தற்போது 77 வயதாகும் புது அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கடந்த காலத்தில், குறிப்பாக அவரது குடும்பத்தில் நடந்த சில சோகமான சம்பவங்கள் தற்போது இணையத்தில் அதிகம் பேசப்பட்டுவருகிறது.
கடந்த 1972 ஆம் ஆண்டு ஜோ பைடனின் முதல் மனைவி, ஒரு வயது மகள் மற்றும் இரண்டு மகன்கள் என நான்கு பேரும் காரில் சென்றுகொண்டிருந்தபோது ஏற்பட்ட மோசமான விபத்தில் சிக்கி ஜோ பைடனின் மனைவி மற்றும் 1 வயது மகள் இருவரும் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் அவரது மகன்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிரி பிழைத்திருந்தாலும் அதில் ஒரு மகன் பியூ பைடன் என்பவர் தமது 46வது வயதில் 2015ம் ஆண்டு மூளைப் புற்று நோயால் இறந்துள்ளார்.
தனது முதல் மனைவி இறந்தபிறகு மிகுந்த சோகத்தில் இருந்த ஜோ பைடன் அதன்பிறகு 1977ம் ஆண்டு ஜில் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அஷ்லே என்ற மகள் 1981ல் பிறந்தார்.