உலகம்

கொரோனா தாக்கியதால் சுவை, வாசனை திறன் பறிபோனது.! அதிர்ச்சி தகவலை கூறிய பிரபலம்..!

Summary:

US pop singer Aaron Tveit lost smell and taste after affecting corono

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உலகநாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 4 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளநிலையில், 18 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிர் இழந்துள்ளனர். ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்கி வருகிறது இந்த வைரஸ்.

இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல பாடகர் ஆரோன் ட்வீட் என்பவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுல ஆரோன் ட்வீட், கடந்த மார்ச் 15 ஆம் தேதி முதல் நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன்.

அதிர்ஷ்டவசமாக தனக்கு லேசான அறிகுறிகளே தோன்றியதாகவும், சளி இருக்கிறது ஆனால் காய்ச்சல் இல்லை. ஆனால், பலருக்கு மிகவும் தீவிரமான அறிகுறிகள் ஏற்படுவதாக அறிகிறேன். இந்த ஆபத்தான வைரஸால் நான் வாசனைத் திறன் மற்றும் சுவையை இழந்துவிட்டதாக உணர்கிறேன் என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார் ஆரோன் ட்வீட். இந்த தகவல் பலரையும் ஆச்சரியப்பட்டவைத்துள்ளது.


Advertisement