வெறும் 5 நிமிடங்களில் கொரோனா இருக்கிறதா, இல்லையா என கண்டறியும் புதிய கருவி..! அமெரிக்கா கண்டுபிடிப்பு..!

வெறும் 5 நிமிடங்களில் கொரோனா இருக்கிறதா, இல்லையா என கண்டறியும் புதிய கருவி..! அமெரிக்கா கண்டுபிடிப்பு..!


US based lab found new way to find corono in 5 minutes

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அணைத்து நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அதேபோல், கொரோனா நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுகளும் வேகமாக நடந்துவருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், கொரோனா வைரஸ் ஒருவருக்கு இருக்கிறதா, இல்லையா என்பதை வெறும் 5 நிமிடங்களில் கண்டுபிடிக்கும் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளது அமெரிக்காவை சேர்ந்த அபாட் என்ற நிறுவனம்.

corono

ஒருவருக்கு வைரஸ் இருந்தால் 5 நிமிடங்களிலும் இல்லாவிட்டால் 13 நிமிடங்களிலும் முடிவுகளை கொடுக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விரைவு சோதனை கருவியை பயன்படுத்த அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து துறை ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போதைக்கு அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளால் மட்டுமே அவசரகால பயன்பாட்டிற்கு இந்த கருவியை பயன்படுத்த அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஒப்புதல் துறை அங்கீகாரம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.