ஆப்கானிஸ்தானில் பள்ளியை திறந்து பெண்களின் கல்விக்கு வித்திடுங்கள் - அமெரிக்கா & நட்பு நாடுகள் தாலிபான்களுக்கு வலியுறுத்தல்.!

ஆப்கானிஸ்தானில் பள்ளியை திறந்து பெண்களின் கல்விக்கு வித்திடுங்கள் - அமெரிக்கா & நட்பு நாடுகள் தாலிபான்களுக்கு வலியுறுத்தல்.!


US and Allies Countries Order to Afghanistan Taliban Govt reopen School

பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் கல்வியில் சம உரிமை வழங்கப்பட வேண்டும், ஆப்கானிஸ்தானில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு கல்வி பயில மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என தலிபான் தலைமையிலான ஆப்கானிய அரசுக்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடத்திற்கு பின்னர் அதிகாரம் தலிபான் வசம் சென்றுள்ளது. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டதை தொடர்ந்து, தலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் கைப்பற்றியது. மேலும், முந்தையை காலங்களைப்போல அல்லாமல், தலிபான் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படும் என தலிபான் அமைப்பு தெரிவித்து இருந்தது. 

கடந்த 7 மாதங்களுக்கு பின்னர் ஆப்கானிஸ்தானில் மாணவிகள் கல்வி பயில பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மாணவிகள் பலரும் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு சென்று இருந்தனர். ஆனால், பள்ளிகள் திறக்கப்பட்ட சிலமணிநேரத்திலேயே மாணவிகள் கல்வி பயில அனுமதி வழங்க முடியாது என தலிபான் அறிவிப்பு விடுத்து மாணவிகளை வீட்டிற்கு அனுப்பி வைத்தது. இது உலக நாடுகளை மீண்டும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கின.

America

இந்த விஷயத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நார்வே நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அறிக்கை வாயிலாக மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என தாலிபான்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், ஒருவருக்கு கல்வி மறுக்கப்படுவதை விட வேறெந்த துயரமும் அவர்களுக்கு பெரிது கிடையாது. தலிபான்கள் தாங்கள் அறிவித்த உறுதிமொழிக்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.