13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
கணவரிடம் ஜீவனாம்ச தொகையை உயர்த்திகேட்க தாய் கொடூர திட்டம்: மகனை தாக்கி வீடியோ அனுப்பிய பயங்கரம்.!
உக்ரைன் நாட்டில் உள்ள, ரஷிய ஆக்கிரமிப்பு பகுதி டொன்ஸ்டஸ்க். இப்பகுதியை சேர்ந்த பெண்மணி அலினா. இவருக்கு திருமணம் ஆகி குழந்தை, கணவர் இருக்கின்றனர்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பெண்மணி தற்போது தனது குழந்தையுடன் தனியே வசித்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று அவர் தனது குழந்தையை கடுமையாக தாக்கி, வீடியோ எடுத்து கணவருக்கு அனுப்பி வைத்தார்.
மேலும், உனது குழந்தையை பராமரிக்க கூடுதல் தொகை செலவாகும் எனவும், தனக்கு ஜீவனாம்சமாக மாதம் தரும் தொகையை உயர்த்தி தரவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இந்த விடியோவை கண்டு அதிர்ச்சியடைந்த பெனின் கணவர், உடனடியாக அதனை வைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, புகாரை ஏற்ற காவல் துறையினர் பெண்ணை கைது செய்தனர்.