உக்ரைன் - ரஷ்யா போர்: களமிறங்குகிறாரா பிரதமர் மோடி.? போர் முடிவுக்கு வருமா..!

உக்ரைன் - ரஷ்யா போர்: களமிறங்குகிறாரா பிரதமர் மோடி.? போர் முடிவுக்கு வருமா..!


ukraine request to modi

உக்ரைன் மீது ரஷியா இன்று போர் தொடுத்துள்ளது. தரைவழி, வான்வெளி மூலம் உக்ரைன் தலைநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷிய பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த தாக்குதலால் இருதரப்பிலும் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த போருக்கு யாரும் குறுக்கே வந்தால் வரலாறு காணாத அழிவை சந்திக்க நேரிடும் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்துள்ளார். இரு நாடுகள் இடையே போர் துவங்கி இருப்பதால் உலக பொருளாதாரம் பாதிக்கும் என பல நாடுகள் கவலை அடைந்துள்ளன.

இதற்கிடையில், போரை நிறுத்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை இந்திய பிரதமர் மோடி தொடர்பு கொண்டு பேச வேண்டும் என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா இன்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திரமோடி இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.