ப்ளீஸ் இதை மட்டும் செய்யுங்கள்... நாங்கள் எப்போதும் உங்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்.! ரஷ்யாவிற்கு எதிராக உதவி கேட்கும் உக்ரைன்.!

ப்ளீஸ் இதை மட்டும் செய்யுங்கள்... நாங்கள் எப்போதும் உங்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்.! ரஷ்யாவிற்கு எதிராக உதவி கேட்கும் உக்ரைன்.!


Ukraine ask help to England

உக்ரைன் மீது ரஷிய படைகள் போர்தொடுத்து 14-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. போர் தொடர்ந்து உக்கிரம் அடைந்துள்ளதால் உக்ரைன் படைகளுக்கும், ரஷியாவின் படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த போரில் ரஷிய தரப்பில் பாதுகாப்பு படையினர், உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

 இரு நாடுகளுக்கும் இடையேயான  போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்த முயற்சிகளின் பலனாக உக்ரைனின் சில பகுதிகளில் தற்காலிகமாக சண்டையை நிறுத்துவதாக ரஷியா அறிவித்துள்ளது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி  காணொளி இணைப்பு மூலம் இங்கிலாந்திடம் உதவி கேட்டுள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனிடம், மேற்கத்திய நாடுகளின் உதவிக்காக நாங்கள் உங்கள் உதவியை எதிர்பார்க்கிறோம். இந்த உதவிக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்,உங்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்று உக்ரைன் அதிபர் கூறினார். மேலும் அவர், ரஷியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளின் அழுத்தத்தை அதிகரித்து, அந்த நாட்டை பயங்கரவாத நாடாக அங்கீகரிக்கவும் என தெரிவித்துள்ளார்.