
அகதிகள் ஆபத்து பயணம்... இங்கிலாந்து - பிரான்ஸ் கூட்டாக சேர்ந்து எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை.!
இங்கிலாந்து நாட்டின் பிரதமர் - பிரான்ஸ் நாட்டின் அதிபர் அகதிகள் ஆபத்தான வழியில் குடிபெயர்வதை தடுக்க ஒருசேர இணைந்து பணியாற்றவுள்ளார்.
உலகெங்கிலும் உள்ள மேலை நாடுகளில் பிற நாடுகளை சார்ந்தவர்கள் அகதிகளாக குடிபெயர்வது தொடர்கதையாகியுள்ளது. இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டிலும் அகதிகள் குடிபெயர்வது, கடல் வழியே ஆபத்தான பயணத்தை எதிர்கொள்வது என பல பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். இதனால் சில நேரங்களில் எதிர்பாராத உயிரிழப்புகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இங்கிலாந்து - பிரான்ஸ் நாட்டில் உள்ள ஆங்கிலக்கால்வாய் வழியாக இங்கிலாந்து நாட்டிற்கு செல்ல முயன்ற புலம்பெயர் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து, 31 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த விஷயத்தை கருத்தில் கொண்டு, இங்கிலாந்து - பிரான்ஸ் நாடுகள் அகதிகளின் உயிரை பாதுகாக்க இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோர் நேற்று (25/11/2021) கருத்துக்களை பரிமாறி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில், "அகதிகள் மேற்கொண்டு வரும் ஆபத்தான குறுக்குவழியை தடுக்கவும், கூட்டு முயற்சியை மேற்கொள்ளவும் இருநாட்டு பிரதமர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
பிறநாட்டில் இருந்து வரும் அகதிகள் பிரான்ஸ் கடற்கரையை அடையும் முன்னர் ஏற்படும் சிக்கலை தவிர்க்கவும், அதனை திறம்பட சமாளிக்கவும் பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற அண்டை நாடுகள் மற்றும் ஐரோப்பிய கண்ட கூட்டாளி நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்ற இருக்கிறோம். அகதிகளின் உயிரும் முக்கியம். அவர்களிடம் ஆசையை காண்பித்து, அளவுக்கு அதிகமாக ஆட்களை படகில் ஏற்றி சட்டவிரோதமாக பயணத்தை மேற்கொள்ள ஊக்குவிப்பவர்கள் தண்டைக்குரியவர்கள்" என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சன் - பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோர் ஸ்கட்லாந்தில் நடைபெற்ற ஐ.நா. காலநிலை மாநாட்டில் சந்தித்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement