பேருந்து மீது ரயில் மோதி விபத்து! 20 பேர் சம்பவ இடத்திலேயே பலி!Train accident in pakistan

பாகிஸ்தான் நாட்டில் ஆளில்லா ரெயில்வே கேட் தண்டாவாளத்தை கடக்க முயன்ற பஸ் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து சர்கோதா நகரம் நோக்கி 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று இரவு பேருந்து  ஒன்று  சென்று கொண்டிருந்தது. அப்போது சிந்து மாகாணம் சுக்குர் மாவட்டம் ரோரி பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட்டை அந்த பேருந்து கடக்க அதிவேகமாக வந்த பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் பேருந்து மீது பயங்கரமாக மோதியது. 

ரயில் வேகமாக மோதியதில் பேருந்து அடித்து இழுத்துச்செல்லப்பட்டது. பேருந்தில் சிக்கிய பயணிகள் அலறல் சத்தம் போட்டுள்ளனர். இந்த  கோர விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அங்கு நடந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக்குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய பயணிகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 60-க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.